என் மலர்

  செய்திகள்

  விஷ்ணு
  X
  விஷ்ணு

  மின்சாரம் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே சட்டையை இஸ்திரி செய்த போது மின்சாரம் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
  பத்மநாபபுரம்:

  தக்கலை அருகே பரைக்கோடு வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் விஷ்ணு (வயது 18), என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர், நேற்று காலை தன்னுடைய நண்பரை பார்ப்பதற்காக வெளியே செல்ல தயாரானார்.

  அப்போது சட்டை ஒன்றை போட எடுத்தார். அந்த சட்டை சுருக்காக இருந்தது. அதனை இஸ்திரி செய்து போட முடிவு செய்தார். அதற்காக வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டியை எடுத்து, ஒயரை அங்குள்ள மின்சார போர்டில் சொருகி, சட்டையை இஸ்திரி செய்ய தொடங்கினார்.

  அப்போது இஸ்திரி பெட்டியின் வழியாக விஷ்ணு மீது மின்சாரம் பாய்ந்தது. அலறியவாறு அவர் தூக்கி வீசப்பட்டார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

  மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு விஷ்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

  இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×