என் மலர்

  செய்திகள்

  வழக்கு பதிவு
  X
  வழக்கு பதிவு

  நிலத்தகராறில் மூதாட்டியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலத்தகராறில் மூதாட்டியை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கண்டமனூர்:

  ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 76). ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுருகன் (38). இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று நிலப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிச்சைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் கண்ணம்மாளை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணம்மாள் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிச்சைமுருகன் மற்றும் அவரது உறவினர்களான செல்வம், கவுசல்யா, தமிழ்செல்வன், சிவக்குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×