என் மலர்

  செய்திகள்

  உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கொத்தனாரை படத்தில் காணலாம்
  X
  உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கொத்தனாரை படத்தில் காணலாம்

  உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் - போலீசார் மீது புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கொத்தனாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  மதுரை:

  மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 36), கொத்தனார். இவர் நேற்று காலை தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அந்த மனுவில், நான் கொத்தானர் வேலை செய்து வருவதால் உடல் அசதிக்காக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவேன். சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெகடர் சக்திவேல், போலீஸ்காரர் ரவிபாண்டி ஆகியோர் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தினர். இதனால் என்னுடைய மனைவி பிரிந்து சென்று விட்டாள். என்னை போலீசார் தாக்கி அவர்களின் பதவி உயர்வுக்கு என்னை பழியாக்குகின்றனர். ஆகவே என்னை துன்புறுத்திய சப்-இன்ஸ்பெக்டர் சகதிவேல், போலீஸ்காரர் ரவிபாண்டி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தார்.

  இந்த நிலையில் திடீரென்று கண்ணன் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை காப்பாற்றினார்கள். பின்னர் அவரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

  இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசாரிடம் கேட்ட போது, “கண்ணன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சீட்டு விளையாட்டு நடத்துவார். அங்கு விளையாடுபவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார். அவர் மீது நகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது.“ என்று தெரிவித்தனர்.
  Next Story
  ×