என் மலர்

  செய்திகள்

  சாலையில் மரம் நடும் போராட்டம்
  X
  சாலையில் மரம் நடும் போராட்டம்

  சாலையை சீரமைக்க கோரி மரம் நடும் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரல்வாய்மொழி அருகே சாலையை சீரமைக்க கோரி திமுக சார்பில் சேதமடைந்த பகுதியில் மரம் நடும் போராட்டம் நடந்தது.
  ஆரல்வாய்மொழி:

  ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட்டுக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ரெயில்வே பாலம் பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 

  எனவே, சாலையை சீரமைக்க கோரி தி.மு.க. சார்பில் சேதமடைந்த பகுதியில் மரம் நடும் போராட்டம் நடந்தது. இதற்கு தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், மாவட்ட பிரதிநிதி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆரல் பேரூர் தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சேதுவேல், ஜேசுராஜ், பிரபு, எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
  Next Story
  ×