search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்களையும் படத்தில் காணலாம்.
    X
    வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்களையும் படத்தில் காணலாம்.

    பெரம்பலூர் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    பெரம்பலூர்:

    சங்கங்களே உறுப்பினர்களுக்கு நேரடியாக கடன் வழங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். வருமான வரித்துறையின் 2 சதவீத டி.டி.எஸ். வரியை ரத்து செய்ய வேண்டும். அங்காடி பணியாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் புதிதாக மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டிருந்தன.

    அந்த சங்கங்களில் பணிபுரியும் 33 பெண்கள் உள்பட மொத்தம் 287 பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வளாகத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அமர்ந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள் தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் திறக்கப்படாததால், அதன் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, விவசாயிகள் உள்ளிட்டோர் கடன் பெற முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை எங்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று சங்கத்தினர் தெரிவித்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலும், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 14 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களும் தொடர் வேலை திருத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×