என் மலர்
செய்திகள்

மலைப்பாம்பு
வாணியம்பாடி அருகே கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு
கிராம மக்கள் வாணியம்பாடி பகுதியில் பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் என்பவரை வரவழைத்தனர். அவர் நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தார்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நேற்று காலை புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் வாணியம்பாடி பகுதியில் பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் என்பவரை வரவழைத்தனர். அவர் நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தார்.
பின்னர் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினரிடம் மலைபாம்பு ஒப்படைக்கப்பட்டது. மலைபாம்பினை வனத்துறையினர் காட்டு பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Next Story