search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன்
    X
    கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன்

    கந்த சஷ்டி கவசம் வீடியோ வெளியிட சொன்னது யார்? -செந்தில் வாசனிடம் போலீசார் தீவிர விசாரணை

    கந்த சஷ்டி கவசத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட செந்தில் வாசனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. 

    கைது செய்யப்பட்டவர்களில் செந்தில் வாசனை மட்டும் வரும் 27-ம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    அதனையடுத்து குற்றப்பிரிவு  போலீசார் செந்தில் வாசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு தொடங்கி விடிய விடிய செந்தில் வாசனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    கந்த சஷ்டியை இழிவுபடுத்தி வீடியோ வெளியிடச் சொன்னது யார்? எந்த அடிப்படையில் கந்த சஷ்டி தலைப்பு தேர்வு செய்யப்பட்டது? அந்த வீடியோ வெளியிடுவதற்கு ஸ்பான்சர் செய்தது யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு செந்தில் வாசன் பதில் அளித்துள்ளார்.

    மேலும், யூடியூப் சேனலின் நிதி தொடர்பான விஷயங்களை செந்தில் வாசன் கவனித்து வந்ததால், வங்கி பணப் பரிமாற்றம் குறித்தும் 
    விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    Next Story
    ×