search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில மனித உரிமை ஆணையம்
    X
    மாநில மனித உரிமை ஆணையம்

    விவசாயி இறந்தது எப்படி? விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

    வனத்துறையினர் அழைத்து சென்ற விவசாயி இறந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர், தனது வீட்டின் அருகே உள்ள வயலில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் 5 பேர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர் இறந்து போனார்.

    இதை அறிந்த அவரது உறவினர்கள், கடையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தி நேற்று ‘தினத்தந்தி’யில் வெளியானது.

    இந்த செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இதுதொடர்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    Next Story
    ×