search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சாத்தான்குளம் வழக்கு- சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா

    சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    மதுரை:

    சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான 10 காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

    இதையடுத்து சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிறப்பு அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு பால்துரை உள்ளிட்ட 3 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 
    Next Story
    ×