என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - 2 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்23 July 2020 2:22 PM GMT (Updated: 23 July 2020 2:22 PM GMT)
திருவண்ணாமலை அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்றுமுன்தினம் இரவில் சென்ற 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் எந்திரத்தை உடைக்க முடியாததால் பாதியில் தங்கள் முயற்சியை கை விட்டு தப்பி சென்று விட்டனர்.
நேற்று காலை தகவல் அறிந்ததும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளை முயற்சி பதிவாகி உள்ளதா? இதில் ஈடுபட்ட நபர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் நல்லவன்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×