என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு
Byமாலை மலர்23 July 2020 12:59 PM GMT (Updated: 23 July 2020 12:59 PM GMT)
தஞ்சை அருகே நண்பர்களுடன் குளித்த போது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது19). இவர் தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பிரவீன்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள புது ஆற்றுக்கு குளிக்க சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன்குமார் ஆற்றில் மூழ்கினார். இதைப்பார்த்த அவருடைய நண்பர்கள் சத்தம் போட்டனர். இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். இரவு நேரம் ஆகி விட்டதால் தொடர்ந்து தேட முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வாண்டையார்இருப்பு அருகே பிரவீன்குமாரின் உடல் கரைஒதுங்கியது. இதையடுத்து அவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×