search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    ஜோலார்பேட்டையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    ஜோலார்பேட்டையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் போலீஸ் நிலையத்தில் உள்ள மின்சார அலுவலகத்தின் முன்பாக ஜோலார்பேட்டை நகர தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    மேலும் ஜோலார்பேட்டை நகரம் மற்றும் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    Next Story
    ×