search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வெங்கல் அருகே மணல் கடத்தல்- 2 பேர் கைது

    வெங்கல் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 27), நந்தகோபால் (47) ஆகிய 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மணலை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×