search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவாடியில் காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    சிவாடியில் காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    சிவாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்

    சிவாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் சில குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் குடிநீர் குழாய்களை தங்கள் வசதிக்கேற்ப மாற்றி அதிக அளவு குடிநீரை பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு போதிய அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்று புகார் எழுப்பினார்கள்.

    அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகத்தை செய்ய வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சிவாடி கீழ் காலனியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ஆறுமுகம், ஊராட்சி செயலர் சித்ரா ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது சிவாடி கீழ் காலனி பகுதிக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து அதன்மூலம் அனைவருக்கும் குடிநீர் வினியோகத்தை முறையாக வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×