search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X
    விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    மேலூர் அருகே கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கக் கோரி மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் கரும்பு விவசாயிகள் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மேலூர்:

    அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கக் கோரி மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் கரும்பு விவசாயிகள் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் பழனிசாமி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பெரியாறு-வைகை பாசனத்தில் கடைசி பகுதியான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து கரும்புகளை பயிரிட்டு அந்த ஆலைக்கு பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு கரும்புகளை வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.7 கோடி வரை நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்“ என்றார்.
    Next Story
    ×