search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மாவட்டத்தில் 107 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் - கலெக்டர் கண்ணன் அறிவிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 107 பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து நேற்று கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்து விட்டநிலையில் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளிலும், நகர் பகுதிகளிலும் நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் நடமாட்டம் மற்றும் வணிக செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களின் விவரம் வருமாறு:-

    ராஜபாளையம் தாலுகாவில் செட்டியார்பட்டி, களங்காப்பேரி, ஆசிரியர் காலனி, சத்திரப்பட்டி, சேத்தூர் மெயின்ரோடு, வடக்கு மலையடிப்பட்டி, சம்மந்தாபுரம், சிவகாமிபுரம், தெற்கு வைத்தியநாதபுரம், சிங்கராஜகோட்டை, பெரியதெரு, கூரைபிள்ளையார் கோவில்தெரு, லட்சுமிபுரம் தெரு, பெரிய கடைபஜார் ஆகிய 14 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் மம்சாபுரம், போலீஸ் குடியிருப்பு, வன்னியம்பட்டி, மாதாகோவில்தெரு, ரைட்டன்பட்டி, அவுசிங்போர்டு, வடக்கு தெரு பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பில் காடனேரி, அரசப்பட்டி, வெள்ளாளன் நடு தெரு, வடக்கு தெரு, வாணிபம் கிழக்கு தெரு, சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோவில், வ.புதுப்பட்டி நடுத்தெரு ஆகிய 8 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி தாலுகாவில் பூலாவூரணி, ரிசர்வ்லைன், சித்துராயபுரம், சிவகாசி சீதக்காதி தெரு, முஸ்லிம்நடு தெரு, காளியப்பா நகர், பி.கே.எஸ்.தெரு, சாட்சியாபுரம், விஸ்வநத்தம், பள்ளபட்டி ரோடு ஆகிய 10 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை தாலுகாவில் பேர்நாயக்கன்பட்டி, இ.டி.ரெட்டியபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, இந்திராநகர், சங்கரமூர்த்திபட்டி, டி.கரிசல்குளம், வெம்பக்கோட்டை, முத்துசாமியாபுரம், எதிர்கோட்டை, கே.மடத்துப்பட்டி, பனையடிப்பட்டி ஆகிய 12 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாத்தூர் தாலுகாவில் தென்றல் நகர் வடக்கு தெரு, உப்பத்தூர், மேலகாந்திநகர் ஆகிய 3 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் தாலுகாவில் ஆமத்தூர், சூலக்கரை, கணபதி மில் காலனி, சத்திரரெட்டியப்பட்டி, மெட்டுக்குண்டு, ஓ.கோவில்பட்டி, விருதுநகர் அண்ணாமலை தெரு, மொன்னி தெரு, முத்துராமன்பட்டி சிவந்திபுரம், பர்மாகாலனி, லட்சுமிநகர், என்.ஜி.ஓ. காலனி, பாண்டியன்நகர், ரெயில்வே பீடர்ரோடு, அய்யனார்நகர், அல்லம்பட்டி, அம்பேத்கர் தெரு, கணேஷ்நகர், ரோசல்பட்டி ரோடு, கந்தபுரம் தெரு, அன்னை சிவகாமிபுரம், டி.சி.கே.பெரியசாமி தெரு, கருப்பசாமிநகர் ஆகிய 23 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டை பகுதியில் ஆலடிப்பட்டி, கொப்புசித்தன்பட்டி, சொக்கலிங்காபுரம், திருநகரம், திருமேனிதெரு, வடுகப்பட்டி, பொம்மக்கோட்டை, கத்தாளம்பட்டி, கோபாலபுரம் இ.பி. காலனி, பாலையம்பட்டி, அன்புநகர், சண்முகவேலன் தெரு, எஸ்.பி.கே. கல்லூரி ரோடு, ராமானுஜர்கூடதெரு, தெற்குதெரு, ஜோதிபுரம் 4-வது தெரு, ஜெயராம்நகர், வடக்குநத்தம், பரளச்சி ஆகிய 19 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சுழி தாலுகாவில் எம்.ரெட்டியபட்டி, லட்சுமிபுரம், எம்.புதூர், சிலுக்குபட்டி, சவ்வாஸ்புரம், கல்லூரணி, திருச்சுழி கிழக்குதெரு, உளுத்திமடை, நரிக்குடி, முதலைக்குளம், உலக்குடி, வீரசோழன், ஏ.முக்குளம் ஆகிய 13 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி தாலுகாவில் மல்லாங்கிணறு மட்டும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    107 கட்டுப்பாட்டு பகுதிகளில் அதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்றும், காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்றும், வீடு, வீடாக கணக்கு எடுத்து நோய் தொற்று விவரங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதனை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×