search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறுப்பர் கூட்டம்
    X
    கறுப்பர் கூட்டம்

    கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க பரிந்துரை

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் இணையதள சேனலைத் தடை செய்யுமாறு யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.
    சென்னை:

    கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் என்பவர் புதுச்சேரியில் சரணடைந்தார்.

    செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் 2 நாட்களாக ஆய்வு செய்தனர்.

    அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு காவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர கருப்பர் கூட்டத்திற்கு சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸூக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இந்து அமைப்பினரும் பாஜகவும் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைத் தடை செய்யுமாறு யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.
    Next Story
    ×