search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டுக்கிளி
    X
    வெட்டுக்கிளி

    ஸ்ரீவில்லிபுத்தூரில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் வாழை விவசாயிகள் கவலை

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் திடீரென ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வாழை மரங்களையும், வாழைக்காய்களையும் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் அதிக அளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வாழை இலைகள் மற்றும் காய்கள் அதிக அளவில் விளைந்துள்ளன.

    இந்த நிலையில் கூட்டம், கூட்டமாக எங்கிருந்தோ வந்த வெட்டுக்கிளிகள் வாழை இலைகளை கடித்து சேதப்படுத்துகின்றன. மேலும் வாழை மரங்களில் காய்த்துள்ள வாழைக் காய்களையும் கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    வாழைத் தோட்டங்களில் உள்ள உயரமான வாழை இலைகளில் வெட்டுக் கிளிகள் கூட்டம் கூட்டமாக தங்கி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதிகாரிகள் பூரணி தேவசேனா, கண்ணன், சித்திரைச் செல்வி ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்தன. மேலும் வெட்டுக்கிளிகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை இலைகளை பார்வையிட்டனர்.

    இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வெட்டுக்கிளிகள் இந்த பகுதியை சேர்ந்த வெட்டுக்கிளிகள் தான். எங்கிருந்தும் வரவில்லை. ஆனால் இதற்கு முன்பு இந்த வெட்டுக்கிளிகள் வாழை இலைகள் மற்றும் வாழைக்காய்களை கடிக்காது. ஆனால் இந்த முறை கடித்து சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.
    Next Story
    ×