search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
    X
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

    விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் சென்ற குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் படு காயமடைந்த 9 பேருக்கு தலா ரூ.50,000மும், லேசான படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5,000மும் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், விழுப்புரம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேரும், புதுக்கோட்டை விபத்தில் பலியான 3 பேரும் என 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×