search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று

    மார்த்தாண்டத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    குழித்துறை:

    தக்கலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையம் மார்த்தாண்டத்தில் உள்ளது. இங்கு பைங்குளத்தை சேர்ந்தவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. மேலும் அவருடைய மனைவி மற்றும் மகளும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அவர்கள் 3 பேரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மார்த்தாண்டத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். குழித்துறை நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார அதிகாரி ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோரின் கண்காணிப்பில் போலீஸ் நிலைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் அங்கு பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மது விலக்கு போலீஸ் நிலையத்துக்கு அருகில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. இதனால் அங்குள்ள பெண் போலீசாரும் அச்சத்தில் உள்ளனர்.

    மார்த்தாண்டம் மீன் சந்தையிலும், காய்கறி சந்தையிலும் 134 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 2 மீன் வியாபாரிகளுக்கும், ஒரு காய்கறி வியாபாரிக்கும் தொற்று உறுதியானது. அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் 2-வது முறையாக குழித்துறை நகராட்சி சார்பில் 164 பேருக்கு சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்று கிராம நிர்வாக அலுவலர் முருகன் கூறினார்.
    Next Story
    ×