search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் வங்கி
    X
    கோவில்பட்டியில் வங்கி

    துணை மேலாளருக்கு கொரோனா- கோவில்பட்டியில் வங்கி மூடப்பட்டது

    கோவில்பட்டி பிரதான சாலையில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி துணை மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பிரதான சாலையில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றும் 54 வயதான கடன் பிரிவு துணை மேலாளருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அவர் ஸ்ரீராம்நகர் நகர்நல மையத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், தாசில்தார் மணிகண்டன் மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த வங்கிக்கு சென்று, அங்கு பணியில் இருந்தவர்களை வெளியேற்றி, வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் வங்கி மூடப்பட்டது. மேலும் துணை மேலாளருடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்ட 17 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, வங்கிக்கு நாளை (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் விடுமுறை அளித்து வங்கி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    Next Story
    ×