search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கிருஷ்ணகிரி சென்ற முதலமைச்சர், நாளை சேலம் மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் சிறு குறு, நடுத்தர தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்திய முதலமைச்சர், கடுமையான காலத்தில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் உடன் போராடி கொண்டிருக்கிறோம். நோய்  பரவலை தடுக்க அரசு எடுத்த முயற்சி காரணமாக தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் கிருஷ்ணகிரியில் விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார். விவசாயிகளின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×