search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சேலம் மாவட்டத்தில் 37,212 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

    சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 514 வீடுகளில் வசிக்கும் 37 ஆயிரத்து 212 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சோதனை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 230 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் இதுவரை 64 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வருபவர்கள் மாவட்டத்தில் 14 இடங்களில் உள்ள சிறப்பு முகாம்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தால் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்து வந்த 104 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள 10 ஆயிரத்து 514 வீடுகளில் வசிக்கும் 37 ஆயிரத்து 212 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றனர்.
    Next Story
    ×