search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

    சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகின.
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியானது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    அந்த வகையில் தேர்வு முடிவு இன்று வெளியாகும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இதுகுறித்து நேற்று அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்பட இருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகின.

    மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
    Next Story
    ×