search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2,805-ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29,600 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 2,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 1,200 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்பட வில்லை. இதுவரை 980 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 425 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மாவட்டத்தில் நேற்று ஓரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 52, 30, 25 வயது பெண்கள். கணேஷ்நகரை சேர்ந்த 31, 36 வயது நபர்கள், லட்சுமிநகரை சேர்ந்த 25 வயது பெண், பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த 73 வயது முதியவர், சிவன்கோவில் தெருவை சேர்ந்த 41 வயது நபர், ஆயுதப்படை போலீசில் பணியாற்றும் 40 வயது நபர், 30 வயது நகராட்சி ஊழியர், அல்லம்பட்டியை சேர்ந்த 25, 26, 40 வயது பெண்கள், 51 வயது நபர்,

    ரோசல்பட்டியை சேர்ந்த 40, 25, 26 வயது பெண்கள், மேலத்தெருவை சேர்ந்த 49, 50 வயது நபர்கள், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 45 வயது நபர், சீதக்காதி தெருவை சேர்ந்த 62 வயது பெண், 12 வயது சிறுமி, கந்தபுரம் தெருவை சேர்ந்த 20 வயது பெண், பாண்டியன்நகரை சேர்ந்த 74 வயது முதியவர், ஐ.சி.ஏ.காலனியை சேர்ந்த 68 வயது நபர், சின்னையா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த 74 வயது முதியவர், லிங்க் ரோட்டை சேர்ந்த 38 வயது நபர், பி.பிரோட்டை சேர்ந்த 25, 44 வயது பெண்கள் ஆகியோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    சிவகாசி குருசாமி தெரு, காளியப்பன் கோவில் தெரு, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது போலீஸ்காரர், விஜயலட்சுமி காலனி, அண்ணா காலனி, சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 26 வயது பெண் போலீஸ், சிவகாசி செவளூர், தென்றல் நகர், அய்யனார் காலனி, சின்னதம்பி நகர், சாட்சியாபுரம், பள்ளபட்டி, காமராஜர் சாலை, முத்துராமலிங்கபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, கவிதாநகர், மலையப்பட்டி, வெற்றிலையூரணி, மேட்டமலை, முஸ்லிம் நடுத்தெரு, சேர்வைக்காரன்பட்டி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    மேலும் ராஜபாளையம், சுந்தரபாண்டியம், ஆலங்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், கூனம்பட்டி, இளையபொட்டல், நத்தம்பட்டி, முகவூர், செட்டியார்பட்டி, சாத்தூர் மேலக்காந்தி நகர், பெரியார்நகர், உப்பத்தூர், வெம்பக்கோட்டை, ரெட்டியார்பட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி, திருச்சுழி, எம்.ரெட்டியப்பட்டி, கத்தாளம்பட்டி, ஆமத்தூர், பாலவநத்தம், பூமாலைப்பட்டி, அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை, சொக்கலிங்காபுரம், கல்லூரணி ஆகிய கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2805-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனைகளை ஓரளவு முறைப்படுத்தி உள்ள நிலையில் முடிவு தெரிய வேண்டிய மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது உள்ள நிலையில் ஏற்கனவே பாதிப்பு அடைந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. எனவே அடுத்த சில நாட்களுக்கு இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பு அடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×