search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு வங்கி
    X
    கூட்டுறவு வங்கி

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன் உதவிகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    Next Story
    ×