search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் (கோப்புப் படம்)
    X
    மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் (கோப்புப் படம்)

    சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை கொலை வழக்காக மாற்றியது சிபிஐ

    சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்துள்ளது.
    சாத்தான்குளம் தந்தை, மகன் சந்தேக மரணம் என பதிந்திருந்ததை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்தது. வழக்கில் முதல் குற்றவாளியாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷை சிபிஐ சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4-வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீஸாரையும் நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்தனர். போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

    சிபிஐ மனு மீது மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஐந்து பேரையும் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். சிபிஐ தாக்கல் செய்த மனு நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×