search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை- அதிகாரி தகவல்

    கும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா கூறியதாவது:-

    கும்பகோணம் நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கும்பகோணத்தை அடுத்த ஏரகரம், தேப்பெருமாநல்லூர், சுந்தரபெருமாள் கோவில், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அங்குள்ள நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    நகராட்சி சார்பில் 265 பேர் நியமிக்கப்பட்டு தினமும் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று இருமல், காய்ச்சல், தும்மல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து கும்பகோணத்திற்கு யாராவது புதிதாக வந்துள்ளார்களா? என்பது குறித்து தினமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 36 ஆயிரத்து 600 வீடுகளுக்கு நேரில் சென்று 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வெளியூர்களிலிருந்து கும்பகோணம் வந்த 190 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×