search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே
    X
    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே

    70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள்- விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

    70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அமைத்து கொடுத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 495 பம்பு செட்டுகள் அமைக்க நடப்பு ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத் திறன் வரையுள்ள ஏ.சி. மற்றும் டி.சி. மோட்டார் பம்பு செட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களை அங்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    குதிரை திறன் 5 எச்.பி., ஏ.சி. மோட்டாரின் மொத்த விலை ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 947, விவசாயிகளின் 30 சதவீதம் பங்களிப்பு ரூ.71 ஆயிரத்து 384. குதிரை திறன் 5 எச்.பி., டி.சி. மோட்டாரின் மொத்த விலை ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 303, விவசாயிகளின் 30 சதவீதம் பங்களிப்பு ரூ. 72 ஆயிரத்து 691. குதிரை திறன் 7.5 எச்.பி., ஏ.சி. மோட்டாரின் மொத்த விலை ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்து 899, விவசாயிகளின் 30 சதவீதம் பங்களிப்பு ரூ. 95 ஆயிரத்து 70. குதிரை திறன் 7.5 எச்.பி., டி.சி. மோட்டாரின் மொத்த விலை ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 569, விவசாயிகளின் 30 சதவீதம் பங்களிப்பு ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 871. குதிரை திறன் 10 எச்.பி., ஏ.சி. மோட்டாரின் மொத்த விலை ரூ. 4 லட்சத்து 37 ஆயிரத்்து 669, விவசாயிகளின் 30 சதவீதம் பங்களிப்பு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 301, குதிரை திறன் 10 எச்.பி., டி.சி. மோட்டாரின் மொத்த விலை ரூ. 4 லட்சத்து 39 ஆயிரத்து 629, விவசாயிகளின் 30 சதவீதம் பங்களிப்பு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 889.

    இந்த திட்டம் மத்திய அரசின் 30 சதவீதம், தமிழகஅரசின் 40 சதவீதம் என மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும். இதுபொது மற்றும் சிறப்பு பிரிவு விவசாயிகள் அனைவருக்கும் பொதுவானதாகும்.

    இத்திட்டத்தின் நீர்மூழ்கி பம்பு செட்டுகள் மற்றும் தரைமட்டத்தில் அமைக்கும் மோனோபிளாக் பம்புசெட்டுகள், இது வரை மின் இணைப்பு பெறப்படாத நீர்ப் பாசனத்திற்கான ஆதாரங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும், செயற்பெறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நாகர்கோவில் அலுவலகத்தினை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04652 260681, 04652 260181, 04651 291055.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×