search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் போலீசாருக்கு வெப்பநிலை பரிசோதனை நடந்தபோது எடுத்த படம்
    X
    பெண் போலீசாருக்கு வெப்பநிலை பரிசோதனை நடந்தபோது எடுத்த படம்

    திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா- போலீஸ் நிலையம் மூடப்பட்டது

    திருப்பூர் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    வீரபாண்டி:

    திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் 56 வயது மதிக்கத்தக்க ஒருவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொ ரோனா பரிசோதனை செய்தார். இதில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து நேற்று காலை பல்லடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமிநாசினி தெளித்து அப்பகுதியை தனிமைப்படுத்தினர். மேலும், அவர் பணியாற்றும் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    இது பற்றி அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்தபோது அவருடன் தொடர்பில் இருந்த சக போலீசார் பீதி அடைந்து உள்ளனர். கடந்த 3 நாட்களாக சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது பொதுமக்கள், போலீசார் யார், யார் அவருடன் தொடர்பில் இருந்தனர்.

    அவர்கள் யாருக்கும் கொ ரோனா தொற்று இருக்கிறதா? என கண்டறிய போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த சுகாதாரத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

    அதோடு சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
    Next Story
    ×