search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு- அரசின் உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

    கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாமக்கல்:

    கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 19-ந் தேதி, 26-ந் தேதிகளில் எந்த விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

    இந்த நாட்களில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள டீக்கடைகள், மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், உழவர்சந்தை, அனைத்து விதமான இறைச்சி விற்பனை கடைகள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும்.

    பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்படும். தீவிர மருத்துவ காரணங்கள் தவிர்த்து, தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    முழுமையான ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச்சட்டம் மற்றும் கொள்ளை நோய் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×