search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றுக்குள் கார் விழுந்து கிடப்பதை காணலாம். (உள்படம்:-பலியான சுடலை)
    X
    கிணற்றுக்குள் கார் விழுந்து கிடப்பதை காணலாம். (உள்படம்:-பலியான சுடலை)

    கயத்தாறு அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து சலவை தொழிலாளி பலி

    கயத்தாறு அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் சலவை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர்கள் சுடலை (வயது 35), அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக். இவர்கள் 4 பேரும் நண்பர்கள். சுடலை சலவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு இவர்கள் 4 பேரும் திருமலாபுரத்தில் இருந்து காரில் கடம்பூருக்கு சென்றனர். அங்கு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் திருமலாபுரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அரிகிருஷ்ணன் ஓட்டினார். திருமலாபுரம் அருகே உள்ள ஒரு வளைவில் வந்தபோது, திடீரென்று கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றுக்குள் கார் விழுந்தபோது அதன் கதவு திறந்ததில் சுடலை வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுடலைக்கு இசக்கியம்மாள் (30) என்ற மனைவியும், 5, 6 வயதில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் சலவை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×