search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கழிவுகள்
    X
    மருத்துவ கழிவுகள்

    ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கழிவுகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

    ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கழிவுகளை எச்சரிக்கையுடன் கையாள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
    மதுரை:

    கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா சிகிச்சை வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, மதுரை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலானோர் திடீர் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலியால் அவதிப்படுகின்றனர். இவர்களும் அருகிலுள்ள சிறிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். அதேசமயத்தில், கொரோனா அறிகுறி இருப்பவர்களும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் கொரோனா தொற்று இருப்பவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. எனவே சிகிச்சை முடிந்த பின்னர், ஊசி, மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி அழிக்க வேண்டும்.

    இது குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆஸ்பத்திரிகளுக்கு தனி வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதன்படி, கொரோனா சிகிச்சை வழங்கும் ஆஸ்பத்திரிகளும், பிற சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, மருத்துவ கழிவுகளை அழிக்க வேண்டும்.

    கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், மிக எச்சரிக்கையுடன் மருத்துவ கழிவுகளை கையாளவும் அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×