search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரையில் ஒரேநாளில் 553 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்

    மதுரையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றவர்கள் நேற்று ஒரேநாளில் 553 பேர் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    மதுரை:

    கடந்த சில தினங்களாகவே மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், குணமடைபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 50-க்கும் குறைவாகவும் இருந்தது.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மதுரையில் 5 இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடுவதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் 553 பேர் குணமடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு முன்பு வரை ஒரே நாளில் அதிகபட்சமாக 107 பேர் வரைதான் குணமடைந்து சென்றுள்ளனர். ஆனால், நேற்று ஒரே நாளில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 553 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது மதுரை மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

    இவர்கள் புதூர், வாடிப்பட்டி, கருங்காலக்குடி, சோலையழகுபுரம், பேரையூர், திருமங்கலம், ஆஸ்டின்பட்டி, கருங்காலக்குடி, மேலூர், தத்தனேரி, செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், அண்ணாநகர், பழங்காநத்தம், அனுப்பானடி, மூன்றுமாவடி, விளாங்குடி, நரிமேடு, ஆத்திக்குளம், சிந்தாமணி, வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் 10 நாட்களுக்கு வீட்டு தனிமையில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 1,803 ஆக உயர்த்துள்ளது.
    Next Story
    ×