search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    3 ஊழியர்களுக்கு கொரோனா- திருச்செந்தூரில் பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டது

    3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூரில் பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 27 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில், இதுவரை 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 4 பேர் திருச்செந்தூரிலும், 7 பேர் தூத்துக்குடியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த கடையில் பணியாற்றும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், ஜவுளிக்கடை நேற்று மூடப்பட்டது. தொடர்ந்து ஜவுளிக்கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நகர பஞ்சாயத்து சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

    தற்போது திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில், திருச்செந்தூர், பரமன்குறிச்சி, உடன்குடி, ஆறுமுகநேரி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 33 ஆண்கள், 7 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 42 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×