search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி

    கொரோனா தடுப்பு பணிக்கு சுகாதார பணியாளர்கள் தேர்வு- கலெக்டர் தகவல்

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக சுகாதார பணியாளர்கள் தேர்வு வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார பணிகளில் தற்காலிகமாக ஈடுபடுத்தும் வகையில் தொகுப்பூதிய அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி நர்சு, ஆய்வக தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    நர்சு பணிக்கு பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (3 ஆண்டு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்), ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப சான்றிதழ்(தமிழ்நாடு மெடிக்கல் எஜூகேசன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆண்டு படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்). பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

    எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் அளவிலான 2 புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கோரம்பள்ளம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வர வேண்டும். அங்கு நர்சுகள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் பதவிகளுக்கு வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 14-ந் தேதி காலை 10 மணிக்கும் நேர்முகத் தேர்வு நடக்கிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×