search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாம்பட்டியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    பெரியாம்பட்டியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வியாபாரிக்கு கொரோனா: பெரியாம்பட்டியில் கடைகள் அடைப்பு

    பெரியாம்பட்டியில் வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடின.
    காரிமங்கலம்:

    ஓசூரில் வசித்த தர்மபுரியை சேர்ந்த வெங்காய வியாபாரி கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவருடைய உறவினரான பெரியாம்பட்டியை சேர்ந்த மற்றொரு வெங்காய வியாபாரி ஓசூரில் தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெரியாம்பட்டிக்கு வந்தார்.

    இந்த நிலையில் சளி, காய்ச்சல் பாதிப்புக்குள்ளான இவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வியாபாரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பெரியாம்பட்டியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன.

    இந்த ஊராட்சி பகுதியில் கொரோனா பரவுவதை தடுக்க 2 முக்கிய சாலைகளின் நுழைவுவாயில் பகுதிகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே வரமுடியாத வகையில் கட்டைகள் கட்டப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. பெரியாம்பட்டி ஊராட்சி பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி சங்கர், ஊராட்சி செயலர் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
    Next Story
    ×