search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் பேசியபோது எடுத்த படம்.
    X
    கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் பேசியபோது எடுத்த படம்.

    கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

    கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி காவல்துறை சார்பில் ஆட்டோ, வேன் ஓட்டுனர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர் கலந்து கொண்டு பேசுகையில், முக கவசம் அணியாத பயணிகளை ஆட்டோ வேன்களில் ஏற்றக்கூடாது. அதேபோல் ஓட்டுநர்கள் கட்டாயம் முககவசம் அணிவதோடு, தங்களது ஆட்டோவில் 3 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். பயணிகளின் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பின்னரே ஆட்டோவில் ஏற்றிச் செல்ல வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதோடு, சானிடைசரை கைகளில் தடவி கொள்ள வேண்டும். மேலும் ஓட்டுனர்கள் தினந்தோறும் தங்களது ஆடைகளை துவைத்து உடுத்தவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

    மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையம் சார்பில் நடந்த இந்த கூட்டத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வணிகர்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சீனுவாசன், வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் பாலசேகர் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ரிஷிவந்தியம் அருகே பகண்டைகூட்டு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து வியாபாரிகள், ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர்கள் பச்சையப்பன், வீரன் ஆகியோர் கலந்து கொண்டு ரிஷிவந்தியம் பகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்க வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றவும், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வலியுறுத்தவேண் டும் என்றனர். மேலும் அரசு விதிகளை பின்பற்றி ஆட்டோ, கார், வேன்களில் பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் பகண்டை கூட்டுரோடு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராயப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், வாகன ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×