search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 123 பேருக்கு கொரோனா

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 781 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 571 பேர், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 200-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 24 ஆண்கள், 17 பெண்கள் என மேலும் 41 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, தேசூர்பாட்டை, அனந்தபுரம், கொங்கரப்பட்டு, திருவம்பட்டு, மழவந்தாங்கல், விழுக்கம், மொடையூர், சின்னநெற்குணம், வானூர், மணம்பூண்டி, திருவாமாத்தூர், எடையாளம், கூட்டேரிப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட 41 பேரும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,370-ல் இருந்து 1,411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 102 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 575 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 250 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பானது 1621 ஆக அதிகரித்துள்ளது. இதில் 810 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 29-ந்தேதி பாதிப்பு எண்ணிக்கையானது 764 ஆக இருந்தது. ஆனால் தற்போது மொத்த பாதிப்பானது 1621 ஆகஅதிகரித்துள்ளது. அதாவது கடந்த 11 நாட்களில் 857 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    இவர்களில் 50 நபர்கள் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தியாகதுருகம், தச்சூர், வாசுதேவனூர், குமாரமங்கலம் ஆகிய இடங்களில் அமைக்கப்டுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என்று பார்த்தால், கள்ளக்குறிச்சி நகராட்சியில் 8, 10, 16, 17, 18, 19 ஆகிய 6 வார்டுகளில் உள்ள 58 தெருக்கள், திருக்கோவிலூர் பேரூராட்சியில் 8,11,12,18 ஆகிய 4 வார்டுகள், செங்கனாங்கொல்லை, விளந்தை, தியாகதுருகம் பேரூராட்சியில் 1,3,4,5,8, வார்டுகள் மற்றும் விருகாவூர், கூத்தக்குடி, எலவனாசூர் கோட்டையில் கிழக்கு கந்தசாமிபுரம், பாரிவள்ளல் தெரு , சின்னசேலம் பேரூராட்சி 4,8 ஆகிய வார்டுகள் மற்றும் வடக்கனந்தல், உளுந்தூர்பேட்டை (சாஸ்திரி நகர், மேற்கு கந்தசாமிபுரம்), சங்கராபுரம் பேரூராட்சியில் 3, 4 ஆகிய வார்டுகள் மற்றும் தேவபாண்டலம் கிராமத்தில் சண்முகா நகர், சிவன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளை நோய் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசித்துவருபவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×