search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

    மொரப்பூர் அருகே கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தர்மபுரி:

    மொரப்பூர் அருகே அப்பியம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த முட்புதர்கள் அண்மையில் அகற்றப்பட்டன. இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கற்களை நேற்று முன்தினம் இரவு வெட்டி பொக்லைன் எந்திரங்கள் மூலமாக லாரிகளில் ஏற்றும் பணியில் சிலர் ஈடுபட்டனர். 

    இதுபற்றி தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கற்களை வெட்டி எடுத்து லாரியில் ஏன் ஏற்றுகிறீர்கள்? என்று அந்த பணியில் ஈடுபட்டவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதையடுத்து கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் விடிய,விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான அனுமதியின்றி கனிமவளங்கள் எடுத்து செல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×