search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவில்பட்டியில் நாளை முதல் 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு

    கொரோனா வைரஸ் காரணமாக கோவில்பட்டியில் நாளை முதல் 5 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில்பட்டியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கோவில்பட்டியில் நாளை (சனிக்கிழமை) முதல் 5 நாட்கள் கடைகளை அடைக்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    கோவில்பட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், தினமும் நோய் தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் கருதியும், கோவில்பட்டி நகராட்சி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதற்காகவும் அத்தியாவசிய கடைகள் என காய்கறி, மருந்து மற்றும் பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அடைக்கப்படுகிறது. இதற்கு வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×