search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள்
    X
    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள்

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் 1,000 படுக்கைகள் தயார்- கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 452 பேர், கொரோனா தொற்று பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருப்போர் 1559 பேர். 1,830 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 200, வாணியம்பாடி, ஆம்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1000 பேருக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் அக்ரகாரம், வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி திருமண மண்டபம், ஆம்பூர் பகுதிகளில் 2 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி தங்க வைக்க இடம் தயாராக உள்ளது. அந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். மாவட்டத்தில் சென்னையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது.

    வேலூரில் இருந்து வருவோர் மீது தனிக்கவனம் செலுத்தி கொரோனா தொற்று உள்ளதா? எனச் சோதனை செய்யப்படும். கொரோனா தொற்றை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். புதிய மாவட்டத்துக்கு அனைத்துத் துறைகளிலும் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து வருகிறது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×