search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு சக்கர வாகனங்கள் திருட்டு
    X
    இரு சக்கர வாகனங்கள் திருட்டு

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் இரு சக்கர வாகனங்கள் திருட்டு

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசு ஊழியர்களின் இரு சக்கர வாகனங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பேரளி நடுத் தெருவை சேர்ந்தவர் மாணிக் கம். இவரது மகன் மகாராஜா (வயது 28). இவர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையர் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு வந்த மகாராஜா தனது மொபட்டை கலெக்டர் அலு வலகம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஜா பல்வேறு இடங் களில் மொபட்டை தேடினார். எங்கு தேடியும் மொபட் கிடைக்காததால் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டையும், அதனை திருடிய மர்மநபர் களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதே போல் பெரம்பலூர் வடக்கு மாதவி 2-வது வார்டு காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மோகன்(36). இவர் ஆலத்தூர் தாலுகா அலுவலகத் தில் தேர்தல் பிரிவில் உதவி யாளராக பணிபுரிந்து வரு கிறார். மோகன் கடந்த 6-ந் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப் போது மோட்டார் சைக்கிளை கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது தொடர்பாக மோகனும் பெரம்பலூர் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளையும், அதனை திருடிய மர்மநபர்களையும் தேடி வருகின்றனர். பெரம்ப லூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் போலீ சார் இருந்தும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்தும் வருவதால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத் தில் மாவட்ட நிர்வாகம் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலக ஊழி யர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
    Next Story
    ×