search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் (கோப்பு படம்)
    X
    ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் (கோப்பு படம்)

    சென்னையில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி

    சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐடி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. டைடல் பார்க், பழைய மகாபலிபுரம் சாலை, ராமாபுரம் டி.எல்.எஃப் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானோர் வேலைப்பார்த்து வருகின்றனர்.

    பொது முடக்கம் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 6-ந்தேதில் இருந்து தமிழக அரசு ஐடி நிறுவனங்களுக்கு தளர்வு அளித்தது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
    Next Story
    ×