search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாழ்ப்பாள்
    X
    தாழ்ப்பாள்

    வீட்டின் உள்ளே தாழ்ப்பாள் போட்டு 2 மணி நேரம் தவித்த குழந்தை

    வீட்டின் உள்ளே தாழ்ப்பாள் போட்டு 2 மணி நேரம் தவித்த குழந்தை தீயணைப்பு துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.
    துவாக்குடி:

    நவல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நடேஷ். இவர் அங்குள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 2-வது மகன் துருவா(வயது 2). நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துருவா, அந்த அறையின் கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டான். சிறிது நேரம் கழித்து அதை திறக்க தெரியாமல் தவித்து, குழந்தை அழத்தொடங்கியது. உடனே அவருடைய பெற்றோர் நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
    Next Story
    ×