என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாத 556 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்8 July 2020 6:06 PM IST (Updated: 8 July 2020 6:06 PM IST)
திருப்பூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 556 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 பறக்கும்படை குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் வீதியில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சமூகஇடைவெளியை கடைபிடிக்காமல் விதிமீறல் இருந்தால் அபராதம் மற்றும் சீல் வைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வெள்ளகோவில் நகராட்சி பறக்கும் படையை தவிர 21 பறக்கும்படை குழுவினர் ஆய்வு செய்தனர். அதன்படி மொத்தம் 851 கடைகள், தொழில் நிறுவனங்களில் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 128 நிறுவனங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல பகுதியில் பொது இடத்தில் எச்சில் துப்பிய ஒருவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோல் முககவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து சோதனை நடத்தினார்கள். இதில் 5 ஆயிரத்து 208 பேரை சோதனை செய்ததில் 556 பேர் முககவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. பறக்கும்படைகுழு மூலமாக மாவட்டம் முழுவதும் ரூ.90 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவினாசி ஒன்றிய பகுதியில் ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
×