search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் -பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நமது நாடு ஒரு கடுமையான பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் ஏற்பட்டிராத இந்தப் பிரச்சினையால், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர்தான் மற்றவர்களை விடவும் அதிகமான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

    இத்தகைய சூழலில், அனைத்துக் குடிக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும்.

    மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தங்கள் மாநில மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டத்தை சுயமாக நிறைவேற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு எப்போதுமே உள்ளது. 

    அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்பதையும், பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் போட்டியிடுவதற்கான இடங்களை ஒதுக்குவதற்கான தேவை பெருமளவில் குறைந்து விட்டதையும் கவனத்தில் கொண்டு அகில இந்திய ஒதுக்கீடை மத்திய அரசு ரத்து செய்து விடமுடியும்.

    அதற்கு பதிலாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டவை போக, மீதமுள்ள இடஒதுக்கீடு கோட்டா அல்லாத குறிப்பிட்ட சதவீத இடங்களில், பிற மாநில மாணவர்கள் போட்டியிட முடியும். இந்த வகையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கென குறிப்பிட்ட சதவீத இடங்களை தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது.

    மருத்துவ படிப்புகள் இளங்கலை முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (நீட்) ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×