என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் சிக்கியது
Byமாலை மலர்8 July 2020 3:24 PM IST (Updated: 8 July 2020 3:24 PM IST)
கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் பிடிபட்டது. கூண்டில் சிக்கிய கரடியை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
கடையம்:
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரக பகுதிகளான பெத்தான் பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், கோட்டைவிளைப்பட்டி, முதலியார்பட்டி, அழகப்பபுரம், பங்களா குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக கரடிகள் உணவுக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் சுற்றித்திரிந்த 9 கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியில் டாக்டர் மகபூப்பாபு தோட்டத்தில் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. அங்கு நேற்று 10 வயதுள்ள ஆண் கரடி பிடிபட்டது. இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் ஆம்பூர் கால்நடை மருத்துவர் சிவமுத்து, ஆய்வாளர் அர்னால்டு, உயிரியலாளர் ஸ்ரீதரன், கடையம் வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம், வனவர் முருகசாமி, காரையார் பிரிவு வனவர் ஜெகன், வனக்காப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கூண்டில் சிக்கிய கரடியை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த பகுதியில் சிக்கிய 10-வது கரடி இதுவாகும்.

Next Story
×