search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன்
    X
    தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன்

    இ-பாஸ் இல்லாமல் வருபவர்களால் தொற்று அதிகரிப்பு- தென்காசி கலெக்டர் தகவல்

    தென்காசி மாவட்டத்தில் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களால் தொற்று அதிகரித்து உள்ளதாக கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்தார்.
    தென்காசி:

    தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் சோதனைச் சாவடிகளை தவிர்த்து பிற பகுதிகள் வழியாக சட்டவிரோதமாக நுழையும் பொதுமக்களால் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று இனங்களை முழுமையாக கண்டறிந்து நோய்களை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுபோன்று வருபவர்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் 04633- 290548 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் பொதுமக்களுக்கு தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், இருமல், மூக்கில் இருந்து தொடர்ச்சியாக நீர் வடிதல் மற்றும் வாசனையை நுகரும் திறன் இழத்தல் ஆகிய அறிகுறிகள் உடைய நபர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்களை உடனடியாக மேற்கூறிய எண்ணிற்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக புகார் பெட்டி மற்றும் வாட்ஸ்-அப் எண் 94436 20761 வழியாக தினமும் பெறப்படும் பொதுமக்களின் குறைகள் அடங்கிய மனுக்களின் மீது தீர்வு கண்டறியப்பட்டு பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×