என் மலர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு- அமைச்சர் தங்கமணியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்8 July 2020 3:06 PM IST (Updated: 8 July 2020 3:06 PM IST)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தங்கமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம்விசாரித்தார்.
சென்னை:
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
அமைச்சர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Next Story
×
X